திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran
நயினார் நாகேந்திரன்X | Nainar Nagenthiran
Published on
Updated on
1 min read

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக அண்மையில் மதுரையில் நடத்தியது உண்மையான முருகர் மாநாடு கிடையாது. திருச்செந்தூரில் நடைபெறக்கூடிய கும்பாபிஷேகம் பக்தர்களுக்குப் பொதுவானது. முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்?. எங்களுடைய கூட்டணி முறையாக அமைந்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து திமுக வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. வரலாறு மாறப்போவதில்லை.

அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும், குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி பற்றி அமித்ஷாவும், அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள்.

தமிழக முதல்வராக எடப்பாடியார் வருவார் என்று இப்போது பேசக்கூடாது. அமித்ஷா ஏற்கெனவே அவருடைய தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லியிருக்கிறார் என்றார்.

SUMMARY

BJP leader Nainar Nagendran has said that the DMK is afraid of elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com