நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!

கோயில் தேர்த் திருவிழாவில் சாதி அடையாளங்களைப் பயன்படுத்தத் தடை..
Madurai High Court Order
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
Published on
Updated on
1 min read

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், சாதி அடையாளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருடம்தோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தேரோட்ட திருவிழா ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், தலைவர்கள் வாழ்க, ஒழிக என்று கோஷமிடுவதும், சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வருவது, சாதி ரீதியான ரிப்பன்கள் கட்டுவது உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், சாதி மோதல்களை தடுக்க இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஏற்கெனவே சாதி ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்து விதிகள் உள்ளது. மேலும், இந்த திருவிழாவின்போது எந்தவித சாதி அடையாளங்களும் பயன்படுத்தக்கூடாது என்றும் தேர் திருவிழா அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

SUMMARY

With the Nellaiappar Temple Chariot Festival about to take place, the Madras High Court's Madras branch has ordered that caste symbols should not be used.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com