பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு பற்றி...
Ranking list for engineering counselling released
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கோவி. செழியன்.
Published on
Updated on
1 min read

2025 - 26 ஆம் கல்வியாண்டு பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.

கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர், 145 பேர் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்,

"2.41 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tneaonline.org இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்துகொள்ளலாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.

பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கார்த்திகா(நாமக்கல்), அமலன் ஆன்டோ(அரியலூர்) ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாணவிகள் பெற்றுள்ளனர்.

7.5% இடஒதுக்கீட்டில் தாரணி(கடலூர்), மைதிலி(சென்னை), முரளிதரன்(கடலூர்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும். சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

TN Higher Education Minister Govi. Chezhian released the rank list for engineering course counselling

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com