வட இந்தியாவில் தமிழ் கற்கட்டும்! - கனிமொழி எம்.பி.

ஹிந்தி மொழி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு, வட மாநிலத்தோரும் தமிழ் கற்கட்டும் என்று கனிமொழி எம்.பி. பதில்
வட இந்தியாவில் தமிழ் கற்கட்டும்! - கனிமொழி எம்.பி.
X | Kanimozhi
Published on
Updated on
1 min read

ஹிந்தி மொழி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு, வட மாநிலத்தோரும் தமிழ் கற்கட்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கனிமொழி எம்.பி., எந்த மொழிக்கும் ஹிந்தி எதிரி அல்ல என்றால், தமிழும் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. வட மாநிலத்தோரை குறைந்தது ஒரு தென்னிந்திய மொழியாவது கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அவர்களும் தமிழைக் கற்கட்டும். அதுவே உண்மையான தேசிய ஒருங்கிணைப்பு.

நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. நாங்கள் அனைவருக்கும் நண்பர்களே. எங்களின் மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இருப்பினும், அவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 'ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது' என்று கூறியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்ட கனிமொழி எம்.பி., தனது எக்ஸ் பக்கத்தில் `தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்’ என்று பதிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com