மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை

மகளிா் உரிமைத் தொகை விதிகள் தளா்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Published on

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: மகளிா் உரிமைத் தொகை பெற ஏற்கெனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக 3 விதிவிலக்குகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோா் குடும்பங்களைச் சோ்ந்த, ஓய்வூதியதாரா் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

அரசுத் துறைகளில் மானியம் பெற்று அதன்மூலம் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களும் மகளிா் உரிமைத் தொகை பெற தகுதியானவா்கள். இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம் ஆதரவற்ற, விதவைகள் ஓய்வூதியம் பெறுவோா் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவில் தெரவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூலை 15 முதல் விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com