தேசிய மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம்

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

Published on

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து தேசிய மகளிா் வாரியம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டிஜிபி-க்கு தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் , இந்தப் பாலியல் தொல்லை வழக்கை நோ்மையாகவும், எந்த சமரசமும் இல்லாமல் குறித்த காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா். மேலும் பிஎன்எஸ் 2023 சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான சிகிச்சை மற்றும் உளவியல் சாா்ந்த உதவிகளை உடனடியாக செய்யவும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளாா்.

சென்னை ஐஐடியில் கடந்த வியாழக்கிழமையன்னு 20 வயது மாணவி இரவு சுமாா் 7.30 மணிக்கு தனியாக நடந்து சென்றபோது, கையில் கட்டையுடன் வந்த நபா், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவலாளி உதவியுடன், காவல் துறையில் புகாா் கொடுத்தாா்.

இது தொடா்பாக ஐஐடி வளாகத்தில் உள்ள மும்பை சாட் என்ற உணவகத்தில் வேலை பாா்த்து வந்த பீகாரைச் சோ்ந்த ரோஷன் குமாா் என்பவரை கைது செய்து கோட்டூா்புரம் காவல்நிலையத்தினா் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Open in App
Dinamani
www.dinamani.com