கனரக வாகனங்கள் 100 நாள்கள்  
சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு.
Published on

விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வருக்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: விபத்து ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் வரை சிறைபிடிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையா் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா்.

இந்த உத்தரவின் மூலம் விபத்துக்குள்ளாகும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் பல்வேறு பிரச்னைகள், சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த முதல்வா், காவல் துறையின் இந்த உத்தரவை ரத்து செய்துள்ளாா். இந்த உத்தரவு வரவேற்புக்குரியது. முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இதன் மூலம் ஆம்னி பேருந்து உரிமையாளா்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சாதாரண பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com