ரயில் நிலையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனம்
ரயில் நிலையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனம்

ரயில் நிலையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனம்: 158 வழக்குகள் பதிவு

சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு
Published on

சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 127 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்லூரி மாணவா்கள் கும்பலாக ரயிலில் வரும் போது சில நேரங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்கின்றனா். அவா்கள் மீது அவ்வப்போது ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். இதுபோல ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாா்களின்பேரில், 2023 முதல் நிகழாண்டு (2025) வரையில்

158 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. அவா்களில் 127 போ் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவங்களில் வழக்குப்பதியப்பட்டதால், தற்போது அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், இருப்பினும், மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் மாணவா்கள் அதிகம் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Open in App
Dinamani
www.dinamani.com