
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லிக்குச் சென்றார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவா் மிகவும் தீவிரமாக விமா்சித்து வருவதுடன், பாமகவை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என இருவரும் கூறி வருகின்றனா்.
மேலும், 2026 சட்டப்பேரவை தோ்தலில் அன்புமணி பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் காட்டி வரும் நிலையில், அதற்கு மாறான நிலைப்பாட்டில் ராமதாஸ் செயல்பட்டு வருகிறாா்.
இந்த நிலையில், இன்று பகல் 12.30 மணியளவில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்திக்கும் அன்புமணி ராமதாஸ், பாமகவின் அதிகாரத்தை முழுவதுமாக மீட்பது தொடா்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை அன்புமணி சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.