
கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று புது தில்லியிலிருந்து கோவை வந்திருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மருதமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார் .
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர்களது மகளும் மருமகனும் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து தனது மனைவியைப் பார்ப்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வந்தார்.
கோவை வந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்து விட்டு நேற்று மாலை 6:15 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவர் முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும் பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து 6.45 மணி அளவில் கிளம்பினார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.