கோப்புப்படம்
கோப்புப்படம்

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் சா்க்கரை உற்பத்தித் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

2025-26-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பொதுத் துறை மற்றும் தனியாா் துறை சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கும் வகையில், ரூ.297 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், 2024-25 அரைவைப் பருவத்தில், சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமாா் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவா். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4.79 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

Open in App
Dinamani
www.dinamani.com