
கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது.
இதற்காக தேரை அலங்கரிக்க ராட்சத இரும்பு ஏணியை 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்த 4 பேரும் உடல் கருகி பலியானார்கள்.
இந்நிகழ்வு புத்தன்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.