தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளையொட்டி, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகைதர வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்
மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளையொட்டி, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகைதர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளாக ஆண்டுதோறும் மார்ச் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஒடிஸா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 8 பயிற்சி மையங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மையத்தில் நடைபெறவுள்ள உதய நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 7 ஆம் தேதியில் வருகை தர வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா, கடந்த ஜனவரி மாதம் 31-ல் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து, கோவையில் பாஜக அலுவலகத் திறப்பு விழாவுக்காக பிப்ரவரி 25 ஆம் தேதியிலும் தமிழகத்துக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மத்திய தொழிற்படை பாதுகாப்பு உதய நாள் நிகழ்ச்சிக்காக தமிழகம் வருகை தரவிருப்பதாகவும் சமூக ஊடகங்கள் செய்திகள் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com