
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், ”திமுக தலைவர் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையார் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்.
இந்திய ஒன்றியத்தின் ஈடில்லா தலைவர் - தமிழ்நாட்டின் உரிமைக்கான சுயமரியாதைக் குரல் கட்சித்தலைவர் - முதலமைச்சரின் கரத்தை மேலும் வலுப்படுத்துவோம். தமிழ்நாடு வெல்ல தளராது நடைபோடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன்: முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவர் சென்னை மெரீனா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
முதல்வரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.