

பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி, எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கிய நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று உடனடியாக தேர்வு அறைக்கு வந்தார்.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகா ஸ்ரீ. இவர் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதற்கான தேர்வு மையம் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியாகும்.
முதல் தேர்வு எழுதுவதற்காக அவர் பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தலையில் கட்டுப்போட்டுக் கொண்டு, காலை 9.45 மணியளவில் தேர்வுக்கு வந்தார்.
அங்கிருந்த கல்வித்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தனர்.
செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் ச.உமா, விபத்தில் சிக்கிய மாணவியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தைரியமாக தேர்வு எழுதுமாறு ஊக்கப்படுத்தி சென்றார்.
மேலும், மாணவிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அங்கிருந்த அறை கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.