
சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் 139 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 திட்டப் பணிகள் தொடக்க விழா - 82 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான 206 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா - 38 ஆயிரத்தி 956 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 423 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் உரையாற்றினார்.
இவ்விழாவில் நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில் ஆறாவது அறிவிப்பாக, நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல், பல மதங்களைச் சேர்ந்த மக்களும் வருகை தருகின்ற நாகூர் தர்கா, இந்த நாகை மாவட்டத்தில்தான் இருக்கிறது. இங்கே இருந்து இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு செய்தியை ஆறாவது அறிவிப்பாக வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக – சென்னை விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும்!
இலங்கைக் கடற்படையால் நம்முடைய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கச்சச்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக புதிய ஒப்பந்தத்தை இலங்கை அரசிடம் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைக் கடற்படை கைது செய்யப்படுவதையும் விசைப்படகுகள் பறிமுதல் செய்வதையும் தடுக்க நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.