ரயில்(கோப்புப்படம்)
தமிழ்நாடு
திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 22627) மாா்ச் 12 முதல் மாா்ச் 14-ஆம் தேதி வரை இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிஷம் நின்று செல்லும்.
திருச்சியிலிருந்து வரும் ரயில் பகல் 1.42 மணிக்கும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து வரும் ரயில் பகல் 12.32 மணிக்கும் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.