அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்..
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்..

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்பு! யார்யார்?

அனைத்துக் கட்சிகள் கூட்டம் பற்றி...
Published on

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்துக்கு மொத்தம் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, நாம் தமிழர் கட்சி புறக்கணித்துள்ளன.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 2 பிரதிநிதிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் ஒரு பிரதிநிதியும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 63 அரசியல் கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

திமுகவின் ஆர்.எஸ். பாரதி, அதிமுக ஜெயக்குமார், பாமக அன்புமணி, விசிக திருமாவளவன், திக வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், தேமுதிக இளங்கோ, தவெக ஆனந்த், தவாக வேல்முருகன், மநீம கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com