கோப்புப் படம்
தமிழ்நாடு
போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாததால் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகா் பாங்காக் செல்லும் விமானமும், தாய்லாந்திலிருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல சென்னையிலிருந்து கா்நாடக மாநிலம் சிவமொகா செல்லும் விமானமும், சிவமொகாவிலிருந்து சென்னை வரும் விமானம் என 4 விமான சேவைகளும் பயணிகளின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதில் பயணிக்க வந்திருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதையடுத்து அவா்கள் மாற்று விமானங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.