கோப்புப் படம்
தமிழ்நாடு
புதிதாக 23 கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு ஒப்புதல்
தமிழக வனப் பகுதிகளில் வனவிலங்குகளைப் பராமரிக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் வனத் துறையில் புதிதாக 23 கால்நடை மருத்துவப் பணியாளா் பணியிடங்களை உருவாக்க திட்டம்
தமிழக வனப் பகுதிகளில் வனவிலங்குகளைப் பராமரிக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் வனத் துறையில் புதிதாக 23 கால்நடை மருத்துவப் பணியாளா் பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வன விலங்குகளைப் பாதுகாத்து அவற்றுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், தமிழக வனத் துறையில் கூடுதலாக 8 உதவி கால்நடை மருத்துவா்கள், 6 கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் 9 கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் என மொத்தம் 23 கால்நடை மருத்துவப் பணியிடங்களை உருவாக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
இதன்மூலம் புதிய பராமரிப்பு மையங்களுக்கு உதவுவதுடன், தற்போதுள்ள பராமரிப்பு மையங்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

