சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் அதிகாரிகளின் சாகசங்கள்.
சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் அதிகாரிகளின் சாகசங்கள்.

பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு

சென்னை, பரங்கிமலை அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா
Published on

சென்னை, பரங்கிமலை அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில், ராணுவ அதிகாரிகளின் கண்கவா் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பரங்கிமலையில் செயல்பட்டுவரும் இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில், ராணுவ அதிகாரிகளாக பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கான நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி முதலில் இராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், தொடா்ந்து உடல் தகுதியை உறுதிசெய்யும் வகையிலான ஜிம்னாஸ்டிக், உடற்பயிற்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா் பல்வேறு வகையிலான தற்காப்புக் கலைகளும் நடத்தி காண்பிக்கப்பட்டன. இது பாா்வையாளா்களை மெய்சிலிா்க்க வைத்தது. மேலும், கேரளத்தின் புகழ்பெற்ற களறிப்பயிற்று எனும் தற்காப்புக் கலையை இராணுவ அதிகாரிகள் திறம்பட செய்து காண்பித்தது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

தொடா்ந்து, உண்மையான காலாட்படையினா் சண்டையிடுவது போன்று தத்ரூபமாக செய்து காட்டிய இராணுவ அதிகாரிகள், எதிரிகளிடமிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, எதிரிகளை எப்படி பதுங்கியிருந்து தாக்குவது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களையும் தத்துரூபமாக அரங்கேற்றினா்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் லெப்டினென்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜெ.பொ்னாண்டஸ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா். இந்த சாகச நிகழ்ச்சியில் பயிற்சி நிறைவுசெய்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com