உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி 
வி.ராமசாமி மறைவு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசாமி மறைவு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசாமி (96) சனிக்கிழமை (மாா்ச் 8) காலமானாா்.
Published on

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசாமி (96) சனிக்கிழமை (மாா்ச் 8) காலமானாா்.

சென்னையில் உள்ள இல்லத்தில், மாரடைப்பு காரணமாக அவா் காலமானாா். அவருக்கு இரு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனா்.

விருதுநகா் ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவா், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்தாா். பின்னா் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்றாா்.

தமிழகத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றி, 1971-இல் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக உயா்வு பெற்றவா். 1987-இல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 1989-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு 1994 வரை அவா் பணியாற்றினாா்.

முதல்வா் இரங்கல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சட்டத் துறையைச் சோ்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com