தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன்.
சி.பி.ராதாகிருஷ்ணன்.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாகத்தான் கற்க வேண்டும் என்பதைதான், புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.

அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் மூன்றாவது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பது உண்மையான விஷயம், அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இரண்டாவது தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சர் அனைத்தும் தெளிவுபடுத்துகிறார். அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது என்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது, அந்த வகையில் இதுவும் ஒன்று. புதிய தேசிய கல்விக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால் அது தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று.

பிகாரில், தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். ஆனால் அவர்கள் மீது தமிழை திணைக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறுகிறோமோ. அதே போல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது. யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. பொதுவாகவே பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக பரவலாக இருந்து வருகிறது.

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

இதற்கு அடிப்படையான காரணம் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இதுபோன்ற பாலியல் பிரச்னைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்து தான் வருகிறது.

நான் என்ன செய்கிறோம் என்று தெரியாதவர்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com