
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரில் இருந்து திருமண நிகழ்விற்காக சேலம் நோக்கி 5 பேர் ஆம்னி வேனில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேம்பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்னி வேனின் முன் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதைஅறிந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு காரில் பயணம் செய்த ஐந்து பேரும் வெளியே இறங்கி பார்த்துள்ளனர். அப்போது காரில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென கார் முற்றிலும் எரிந்தது.
அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.