உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிறுவியதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதைவிட இரண்டு மடங்கு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் உங்களின் தொழில் நிறுவனத்தை நிறுவுவது, தமிழ்நாட்டின் மேல் நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

உலக நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு தான் முதல் முகவரி என்று நீங்கள் வெளிப்படையாக அறிவித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும், கோத்ரேஜ் நிறுவனத்திற்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்வு! தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல் மிக்கது, போட்டித்தன்மை கொண்டது. இனி வருங்காலங்களில், மேலும் இந்த நிலை அதிகரிக்கும். மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று என்பதால், தமிழ்நாடு பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரி! இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம், தமிழ்நாடுதான்! இறக்குமதி சார்புகளை வெகுவாக குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நாங்கள் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! எப்போதும் Positive-ஆன சிந்தனையோடு சேர்ந்த Positive-ஆன செயல்கள் எல்லாம், வெற்றியில்தான் முடியும்!

2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் இலட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்குத் தேவையான, அனைத்து ஆதரவுச் சேவைகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால், வெற்றி நிச்சயம்! அதைத்தான் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம்!

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடிகிறது. அந்த வகையில், உங்களின் வருகை, எங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது! தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது! பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது

என்று உலகத்திற்கே தெரியும்! அதனால்தான் தமிழ்நாட்டில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது! இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com