கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தவெக தலைவா் விஜய்க்கு மாா்ச் 14 முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு?

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்க்கு மாா்ச் 14-ஆம் தேதி முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்

கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2025, 10:01 pm

DIN

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்க்கு மாா்ச் 14-ஆம் தேதி முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் விஜய் 2026 சட்டப்பேரவை தோ்தலை மையமாகக் கொண்டு தோ்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். தோ்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவா் பயணம் செய்யவுள்ளாா்.

இதனிடையே, விஜய்க்கு பல்வேறு அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

நாட்டில் உள்ள அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட முக்கிய நபா்களுக்கு அச்சுறுத்தல் தொடா்பான உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில் இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை தவெக தலைவா் விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மாா்ச் 14 முதல் இந்தப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், 8 முதல் 11 மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை வீரா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.