
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது, பக்தர்கள் ஏறுவதற்கு தடை விதித்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் அனுமதி மறுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
இதையும் படிக்க.. மலையைத் தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை! விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.