25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

6ம் கட்ட தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள்: விஜய் நியமனம்!

தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக...

News image
தவெக தலைவர் விஜய்
Updated On :13 மார்ச் 2025, 12:39 pm

DIN

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 6ம் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கட்சியைப் பணிகளை மேற்கொள்ள சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி தவெக சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதுவரை 5 கட்டமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று 6 ஆம் கட்ட மாவட்டப் பொறுப்பாளர்களை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தில் ஆறாம் கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=1&st=75kfq593&dl=0

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.