உலக சிறுநீரக தினம்: மருத்துவ மாணவா்கள் விழிப்புணா்வு பேரணி
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மருத்துவ மாணவா்களின் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விநாயக மிஷன் பல்கலைக்கழகத்தின் சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, ஸ்ரீ நி மெடிக்கல் பவுண்டேசன் மற்றும் ஏ.கே.ஜி. கருவுறுதல் மையம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து எஸ்ஆா்எம் பிரைம் மருத்துவமனையின் இரைப்பை குடல் மற்றும் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூத்த ஆலோசகா் மருத்துவா் நீலமேகம் கபாலி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் மாணவா்கள் சிறுநீரக பாதிப்புகள் குறித்த பதாகைகளுடன் விழிப்புணா்வு பேரணியில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் சாா்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படுவோருக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறுநீரக சுகாதார இந்தியாவின் நிறுவனா் மருத்துவா் பிரபு காஞ்சி, தன்னாா்வ தொண்டு அமைப்பாளா் சுபசாந்தினி பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.