வரும் நிதியாண்டுக்கான (2025 - 26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் சற்று நேரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். தினமணி.காம் இணையதளத்துடன் இணைந்திருங்கள். செய்திகள் உடனுக்குடன்..
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைதான் முழுமையாக நிதிநிலை அறிக்கையாகும்.
எனவே, இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை இன்று காலை 9.30 மணிக்குக் கூடுகிறது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பேரவை கூட்டத் தொடரின் நாள்களை இறுதி செய்வதற்காக அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறும்.
இன்னும் சற்று நேரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு நடைபோடுகிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்.
தமிழ்நாட்டு உரிமையை காக்க முதல்வர் காட்டும் உறுதியை நாடே உற்றுநோக்குகிறது.
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முன்னணி மாநிலங்களில் தமிழகமும் உள்ளது.
ஒரு நூற்றாண்டாக தமிழகத்தின் பாதை தனித்துவமானது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் பட்ஜெட் உரை தொடங்கும்முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும்.
ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை!
ஊரகப் பகுதிகளில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
ஊரகப் பகுதிகளில் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள்!
இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்.
ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்.
2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
INEQUALITY IS A CHOICE, BUT WE CAN CHOOSE A DIFFERENT PATH என்பதன் தமிழாக்கம் "சமத்துவமின்மை என்பது ஒரு வாய்ப்பு, ஆனால் நாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்" என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் உரையைத் தொடங்கினார்.
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம் அமைக்கப்படும். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு!
கலைஞர் கனவு இல்லம் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
ரூ.675 கோடி செலவில் 102 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் செய்து தரப்படும்.
சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம்!
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.
மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும்.
நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும்.
ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்! 29.74 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்!
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்!
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)!
மகளிர் நலத் திட்டங்களுக்கு மகுடம் வைக்கும் திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை.
வரும் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையினருக்கு சமமான ஊதியம் மூன்றாம் பாலினத்தவருக்கும் தரப்படும்.
மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் நிதியாண்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)!
ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்!
வேளச்சேரியில் புதிய பாலம்! ரூ.310 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயனடைவார்கள்.
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!
சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்!
வேளச்சேரியில் புதிய பாலம்! ரூ.310 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயனடைவார்கள்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.
ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.
ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!
ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு!
குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
அரச பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு
கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!
ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை
அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்.
வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள்.
ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.
மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அதன்படி, முதியவர்களை பகல் நேரங்களில் பராமரித்துக் கொள்ளும் வசதியுடன் இந்த அன்புச் சோலைகள் இயங்கும் என்று தெரிய வந்துள்ளது.
ரூ.110 கோடியில் அமைக்கப்படும் அன்புச்சோலைகள் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்களாக செயல்படும்.
மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள்.
மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு
40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.
இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம்
2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்!
ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன்!
ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம்!
தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்!
45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்!
நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு
கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!
காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
700 படுக்கைகள் கொண்டு சிகிச்சை அதிநவீன மையமாக மாற்றுவதற்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு செய்யப்படும்.
பரவிவரும் கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும்.
இதற்கு ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது.
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு.
விண்வெளித் தொழில்நுட்ப நிதி - ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும்.
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 உருவாக்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு!
அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு!
இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை.
ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும்.
அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும்.
30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு.
விண்வெளித் தொழில்நுட்ப நிதி - ரூ.10 கோடி ஒதுக்கீடு
கடல்சார் வள அறக்கட்டளை - ரூ.50 கோடி ஒதுக்கீடு
4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள்.
ரூ.11,721 கோடியில் புதிய புனல் மின் நிலையங்கள்
வெள்ளிமலை - 1,100 மெகாவாட் திறன்
ஆழியாறு - 1,800 மெகாவாட் திறன்
ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம்
3,010 ஏக்கர் பரப்பளவில் 14 டிஎம்சி கொள்ளளவுடன் உருவாக்கப்படும்.
செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா கோவை மாவட்டம் சூலூர் மற்றும் பல்லடத்தில் அமைக்கப்படும். இவ்விரண்டு இடங்களிலும் தலா 100 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே ரூ.9335 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.
கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும்.
சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் தடம் வரும் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.
உதகை, கொடைக்கானலில் ரோப் வே திட்டத்தை ஏற்படுத்தவும் ஆய்வு.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்துத் துறையில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு.
ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம்!
6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி.
கடல்சார் வள அறக்கட்டளை - ரூ.50 கோடி ஒதுக்கீடு
4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள்.
சென்னை: 950
மதுரை: 100
கோயம்புத்தூர்: 75
ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைத்தல்!
19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு!
10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி!
சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!
ஐம்பொன் சிலைகளுக்கு மரபுசார் காட்சி அரங்கம்!
ரூ.40 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படும்!
திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
மீன்பிடித் தடைக்காலம் மானியமாக மீனவர்களுக்கு தலா ரூ.8,000 தரப்படும்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச் சாலை அமைக்கப்படும்.
உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் 52 ஏக்கரில் ரூ.70 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து சின்னமுட்டம் வரை படகுப் போக்குவரத்து
சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்கும் வகையில் சட்ட முன்படிவு கொண்டு வரப்படும்.
பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும்.
கோயம்புத்தூரில் 12.5 கி.மீ. நீளம் கொண்ட சாலைகள் ரூ.348 கோடியில் உருவாக்கப்படும்.
திருநெல்வேலியில் 12.4 கி.மீ. நீளமுள்ள சாலை ரூ.225 கோடியில் உருவாக்கப்படும்.
ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடியில் அமைக்கப்படும்.
பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும்.
ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் பணி மேற்கொள்ள ரூ.125 கோடி ஒதுக்கீடு
40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
வங்கிக் கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகை.
150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க ஏற்பாடு.
கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம், ஆவடியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் ரூ.75 கோடி செயல்படுத்தப்படும்.
ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாகக் குறையும். 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைவோம் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும்,
வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,4 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் 14.6% அதிகரிக்கும் என கணிப்பு
மத்திய அரசின் உதவி மானியங்கள் வரும் நிதியாண்டில் ரூ.23,834 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மத்திய அரசு வரியின் பங்கு ரூ.52,491 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.46,467 கோடியாக குறைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து வெறும் நான்கு சதவீதம்தான் வருகிறது.
பத்து இலட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு.
கல்லூரி மாணவர்களுக்கு கணினி!
மகளிர் தொழில் முனைவோர் 1 இலட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம்
ஐ.டி. பூங்கா, வணிக மண்டலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம்பெறும்.
2024 - 25இல் மாநிலத்தின் கடன் விகிதம் 26.43 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார்.
இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு உரையாற்றினார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீதான உரையை வாசித்தார்.