ஏப். 30 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
அப்பாவு
அப்பாவு
Published on
Updated on
1 min read

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். அமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் இன்று சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை(மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,

'தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.

நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை மட்டும் கேள்வி நேரம் இல்லை.

வரும் மார்ச் 17 (திங்கள்கிழமை) முதல் 5 நாள்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறும்.

தொடர்ந்து மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com