7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள்!

தமிழகத்தில் 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அறிவிப்பு
வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்Center-Center-Tirunelveli
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த ரூ.15.05 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பில்,

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.841 கோடியில் செயல்படுத்தப்படும்.

உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும். இதற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.

நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் ரூ.12.50 கோடியில் கொண்டு வரப்படும்.

ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதாரச் சுமையினைக் குறைக்கும் திட்டம் ரூ.21 கோடியில் கொண்டு வரப்படும்.

இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திட இயற்கை வேளாண்மைத் திட்டங்கள் ரூ.12 கோடியில் உருவாக்கப்படும்.

உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம்.

சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் கொண்டு வரப்படும்.

உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் ஏற்படுத்தப்படும்.

மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க "மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்" கொண்டு வரப்படும். இதற்காக ரூ.40.27 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல்.

பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட "பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com