வேளாண் பட்ஜெட் நிறைவு! வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!!

வேளாண் பட்ஜெட் நிறைவடைந்தது.1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!
வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்
Published on
Updated on
1 min read

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இன்று காலை பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதும், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து, விவசாயிகளின் புகழ்பாடும் திருக்குறள் மற்றும் புறநானூறு பாடல்களைப் பாடி உரையைத் தொடங்கினார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 2030, 2050 ஆண்டுகளில் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.

அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கென ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com