முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.
Updated on
1 min read

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

🏢முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

🚜புதிய தொழில்நுட்பங்கள்,

🌾சிறு குறு விவசாயிகள் நலன்,

🧑‍🌾மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

🌾டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

🌾வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று #TNAgriBudget2025 வெளியிடப்பட்டுள்ளது.

எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று(சனிக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில், சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com