ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ.
சென்னை மெட்ரோ.
Updated on
1 min read

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இந்தமுயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் சிஎஸ்கே(CSK) போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ ரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும். கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில்நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும். ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ ரயில் புறப்படும் நேரம்சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 23இல் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com