நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்!

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த புளி
விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த புளி
Published on
Updated on
1 min read

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்..

2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு.

பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்.

உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்.

500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும்!

அனைத்து வேளாண் பணிகளையும் இயந்திரம் ஆக்கும் நோக்கில், ரூ. 3 கோடியில் இது குறித்து உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும்.

300 கிராம இளைஞர்களுக்கு மன் அள்ளும் இயந்திரம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

வேளாண் வணிகத்துறை மூலம் 100 மதிப்பு கூட்டு அலகு அமைக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.

இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com