

பாஜகவினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தில் பெண் தொண்டர் ஒருவர் மயக்கம் அடைந்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை முன்னதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருடைய இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மாலை 6 மணி ஆகியும் விடுவிக்காததைக் கண்டித்து தமிழிசை செளந்தரராஜன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க: மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி
பெண்களை 6 மணிக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கக் கூடாது என்று சட்டம் இருந்தும், விடுக்கதாதது ஏன் காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பி, உள்ளிருப்பு போராட்டத்தை பாஜக பெண் தொண்டர்களுடன் நடத்தினார்.
இப்போராட்டத்தில், பாஜக பெண் தொண்டர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு தன்னுடைய சொந்த வாகனத்தில் தமிழிசை செளந்தரராஜன் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.