
நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவைத் தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அப்பாவு கனிவானவர், அதேநேரத்தில் கண்டிப்பானவர். என் தலையீடோ, அமைச்சர்கள் தலையீடோ இன்றி பேரவையை நடத்தி வருகிறார். நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு.
விருப்பு, வெறுப்பின்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். சுதந்திரக் காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து சிறப்பாக செயல்படுகிறார்.
உட்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பதை திசைதிருப்ப இந்த தீர்மானமா?. அதிமுக ஆட்சியில் அவைத் தலைவர்கள் நடந்துகொண்டது போல் தற்போதையை பேரவைத் தலைவர் அப்பாவு நடந்துகொள்வதில்லை. அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது.
தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.