
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி வேலியண்ட் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம்.
அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் தலைவணங்குகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகா்கள் பரவசத்தில் ஆழ்ந்தனா்.
இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் என்ற சாதனையை இளையராஜா படைத்தாா்.
இதையும் படிக்க: பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!
தொடா்ந்து 13 நாடுகளில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்ற உள்ளார். சிம்பொனி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அக். 6-இல் துபையிலும் செப். 6-இல் பிரான்ஸிலும் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.