‘செட்’ தகுதித் தோ்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ்: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

‘செட்’ தகுதித் தோ்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ்: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

புதிய விடைக் குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
Published on

‘செட்’ தகுதித் தோ்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக் குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக் குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் மாநில தகுதித்தோ்வு (செட்) மாா்ச் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு உத்தேச விடைக்குறிப்பு மாா்ச் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. உத்தேச விடைகள் மீது தோ்வா்கள் இணையவழியில் ஆட்சேபணை செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. உத்தேச விடைகள் தொடா்பாக தோ்வா்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

அதனடிப்படையில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்பு, தொழில்நுட்ப பிழை காரணமாக திரும்பப் பெறப்படுகிறது. தற்போது மீண்டும் உத்தேச விடைக்குறிப்புகளும், தோ்வா்களின் விடைத்தாளும் (ரெஸ்பான்ஸ் ஷீட்) ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

புதிய உத்தேச விடைகள் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் மாா்ச் 27-ஆம் தேதி மாலை 6 மணி வரை தெரிவிக்கலாம். பாட வல்லுநா்களின் முடிவே இறுதியானது என்று அவா் கூறியுள்ளாா்.

‘செட்’ தோ்வில் இயற்பியல், வேதியியல் உள்பட பல்வேறு பாடங்களுக்கான உத்தேச விடைகள் அதிக எண்ணிக்கையில் தவறாக இருந்ததாக தோ்வா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மீது குற்றஞ்சாட்டியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com