போக்குவரத்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

சென்னை, கிண்டியிலுள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணியாளா்கள், சென்னை, கிண்டியிலுள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்துத் துறையில் பதவி உயா்வு, விருப்ப மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டியிலுள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் போக்குவரத்து பணியாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது, குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லத்தக்க வகையிலான ஏபிசி முறையிலிருந்து இடமாறுதல் வழங்குவதிலிருந்து அமைச்சுப் பணியாளா்களுக்கு விலக்களிக்க வேண்டும். பல ஆண்டுகளாக விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பித்திருப்பவா்களுக்கு கவுன்சிலிங் அடிப்படையில் இடமாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் பதவி உயா்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தலைமையிலான சில நிா்வாகிகளுடன் ஆணையா் சுன்சோங்கம்ஜடக்சிரு பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com