குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு ஏன் இல்லை? சீமான் கேள்வி

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் சீமான்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் சீமான்.
Updated on
1 min read

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாதி வாரி கணக்கெடுப்பு போராட்டம் நடத்திய பின் அந்தப் போராட்டத்தை யாருமே மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. ஆனால் என்னை அவமானப்படுத்துகிற செய்திகளை மட்டும் உடனுக்குடன் ஒளிபரப்புகிறீர்கள். யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

வீட்டை விட்டு வெளியே வந்தால் அச்சத்துடனே வெளிவரக்கூடிய ஒரு சூழல் உருவாகி உள்ளது. தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை, ஞானசேகரன் வாக்குமூலத்தை ஏன் வெளியிடவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

சேலத்தில் படம் எடுத்தால் ஓடாது என பலரும் கூறினர்: இயக்குநர் மாரி செல்வராஜ்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை, ஆனால் இங்கே இருப்பவர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய்க்கு வெளியில் வர நேரமில்லை நேரம் வரும்போது வெளியே வருவார். மீனவர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? 800 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

குஜராத்தில் மீனவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில் தமிழக மீனவர்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்கிறார்கள். பிரச்னை இல்லை என்றால் ஏன் போராட்டம் வருகிறது. பொழுதுபோக்குக்காக யாரும் போராட்டம் நடத்தவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com