நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
Published on
Updated on
1 min read

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை என்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் நியாயமற்ற முறையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாகப் பாதிக்கும்.

மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும்.

மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது.

இந்த தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்று பேசினார்.

இந்த கூட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com