யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
Published on
Updated on
1 min read

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு: நாங்கள் தான் எஜமானர்கள். யாருக்கும் நாங்கள் பயப்படவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்.

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி சூசகமாக சொல்லியுள்ளார் என்று கூறினார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதக வெளியேறுகிறதா? என்ற கேள்விக்கு, பிரேமலதா மதுரையின் மருமகள் தான்.

அவரிடம் அதை கேளுங்கள் எனத் தெரிவித்தார். அதிமுக கூட்டணி கணக்குகள் குறித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்து தொடர்பான கேள்விக்கு: திமுகவால் எங்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் வரப்பு தகராறெல்லாம் கிடையாது.

கொள்கை முரண்பாடு தான். நாங்கள் முன்பை விட இப்போது திடமாக இருக்கிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com