ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் புறபட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயிலில் 14 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2- பொதுப் பெட்டிகள் உள்ளிட்டவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.