தமிழகத்தில் நிகழாண்டில் 21,740 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் 21,740 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் நிகழாண்டில் 21,740 பேருக்கு காசநோய் பாதிப்பு
Updated on

சென்னை: தமிழகத்தில் நிகழாண்டில் 21,740 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், நிகழ் ஆண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே தற்போதைய புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 21,740 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 5,700 பேரும், அரசு மருத்துவமனைகளில் 16,040 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் 22,870 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com