அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

திமுக, பாஜகவை ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருப்பது பற்றி...
ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா
Published on
Updated on
1 min read

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

மக்களால் கட்சியினரால் பாசமுடன் அழைத்த தளபதியை வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைப்போம். வெற்றித் தலைவரை அழைக்க வேண்டும் என்ற மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கிறேன்.

எதிர்க்கட்சிகளை எப்படி உடைக்க வேண்டும், எதிர்க்கட்சி தலைவர்களை எப்படி விலைக்கு வாங்குவது, தவெகவுக்கு எதிராக எப்படி பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது.

அப்படி செட் செய்யப்பட்டவர்தான் அண்ணாமலை. தில்லியில் அமர்ந்துகொண்டு பிற மாநிலங்களில் மோடி செட் செய்து வருகிறார். ஆனால், திமுக அண்ணாமலையையே செட் செய்துவிட்டது.

அமைதியாக இருக்கும் புலியை தொந்தரவு செய்யும் ஆடு போன்று, திமுகவுக்கு எதிரான யுத்திகளை நாங்கள் வகுத்து கொண்டிருக்கும்போது, அண்ணா பல்கலைக்கழக பிரச்னையை பேசிக் கொண்டிருக்கும்போது சட்டையைக் கழற்றி சாட்டையால் அடித்துக் கொள்கிறார் அண்ணாமலை.

இன்றுவரை பெரியார், அம்பேத்கர் சிலைகளை அண்ணா அறிவாலயத்தில் வைக்கவில்லை. தமிழக உள்துறை அமைச்சரான முதல்வர் சரியில்லை. தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை. எதிர்க்கட்சியினர் பேசினார் நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிடுகிறார்கள்.

திமுகவும் பாஜகவும் எதிரிகள் போன்று நாடகமாடுகிறார்கள். முசோலினியும் ஹிட்லரும் சேர்ந்துகொண்டு அரசியலை உருவாக்கி வருகிறார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com