
மதுரை மக்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசனின் தந்தை இரா. சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்புராம், இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
மதுரையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வருகின்ற ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.