திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கல்

திருச்சியில் புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக 40 பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன.
புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வழங்கப்பட்ட உண்டியல்களுடன் மாணவ,  மாணவியர்கள்.
புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வழங்கப்பட்ட உண்டியல்களுடன் மாணவ, மாணவியர்கள்.
Updated on
1 min read

திருச்சியில் புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக 40 பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஞாயிறு மாலை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடத்திய செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் கூட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன. நகர் நல சங்கத் தலைவர் கி. ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி விக்டர் பொன்னுதுரை மாணவர்களுக்கு உண்டியல்களை வழங்கினார்கள். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறுதொகையினை உண்டியலில் சேமிக்க வேண்டும்.

சேமித்த பணத்தை கொண்டு முக்கிய நாள்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்க வேண்டும். பங்கேற்ற மாணவர்கள் உண்டியலில் பணத்தை சேமித்து புத்தகங்கள் வாங்குவதாக உறுதி அளித்தனர். தலைமை ஏற்று பேசிய ஜெயபாலன், மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் பழக்கம் நிச்சயமாக இளைஞர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறினார்.

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

தமிழ் புத்தாண்டு தினத்தன்று புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அன்று மாணவர்கள் உண்டியலில் சேமித்த பணத்தை கொண்டு புத்தகங்கள் வாங்க முன்வர வேண்டும் என்று நகர் நலச் சங்கம் செயலர் து. செந்தில் குமார் கூறினார். தமிழ்செல்வி இளங்கோ, மூத்த சமூக ஆர்வலர் 'சுத்தம் - சுகாதாரம்' உறுதி மொழியை மாணவர்களை ஏற்க வைத்தார். இறுதியாக யோகா துணை பேராசிரியர் சுமதி தர்மன் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிமுக யோகா பயிற்சி அளித்தார்.

மறைந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் S. R. சத்தியவாகீஸ்வனின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com