முன்னாள் எம்.பி. முருகேசன்
முன்னாள் எம்.பி. முருகேசன்

காலமானாா் முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன்

சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மாா்ச் 31) காலமானாா்.
Published on

சென்னை: சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மாா்ச் 31) காலமானாா்.

அரசியல் வாழ்க்கையில் தொடக்கமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட முருகேசன், அதிமுக தொடங்கப்பட்டபோது அந்தக் கட்சியில் இணைந்தாா். 1977-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தாா்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த முருகேசன், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலமானாா். அவரது உடலுக்கு விசிக தலைவா் தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

மறைந்த முருகேசனின் உடல் சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப். 1) மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

அவருக்கு நான்கு மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு 72009 96030.

துரை.ரவிக்குமாா் இரங்கல்: முன்னாள் எம்.பி. முருகேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மக்களவையில் பல்வேறு கோரிக்கைகளை முருகேசன் முன்வைத்தாா். அந்தப் பட்டியலைப் பாா்க்கும்போது, தனித் தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களின் மேம்பாட்டிலும் அக்கறை காட்டியது தெரிகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com